உன் வேலைய பாத்துட்டு போ.! வருணுக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.! கதறி அழும் சக்தி.!

மௌனராகம் சீரியலில் சக்தியை அவரது மாமியார் திட்டி அனுப்பவும் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சக்தி வருணுக்கு எப்படியாவது சரியாக வேண்டும் என்று ஒரு திட்டத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார். ஆனால் அது சரிவராது என்று சொல்லி அனைவரும் சக்தியை திட்டி தீர்த்து விடுகின்றனர். ஆனால் எப்படியாவது வருணை காப்பாற்ற வேண்டும் என்கிற போராட்டத்தில் சக்தி இருக்கிறார். வருணின் தாயார் கஸ்தூரி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீ விபத்தில் இறந்துவிட்டார் என்று மன அழுத்தத்தில் இருக்கிறார் கஸ்தூரியின் மூத்த மகன் வருண். இவருக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியும் மனநிலை சரியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் வருணுடைய அத்தை ஷீலா தான். ஷீலாவுக்கும் வருணின் அப்பாவிற்கும் பகை இருக்கும் காரணத்தினால், ஷீலா வருண் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக வருண் வீட்டிலேயே தங்கி விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் வேலைய பாத்துட்டு போ.! வருணுக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.! கதறி அழும் சக்தி.! 1
வீட்டிலிருந்து கொண்டு வருணுக்கு மன நோய் சரியாகாமல் பார்த்துக் கொள்கிறார். அதே சமயம் வருணின் தாயாரை தீ விபத்தில் இருந்து மீட்டு 15 ஆண்டுகளாக கடத்தி வைத்திருக்கிறார் ஷீலா. வருணுக்கு மாத்திரைகளை மாற்றி கொடுப்பதை சக்தி அறிந்து கொண்டு அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு விடுகிறார். இதனால் ஷீலாவை வீட்டிலிருந்தே விரட்டி அடித்து விடுகின்றனர். அவர் காதம்பரியின் வீட்டில் தஞ்சம் புகுந்து அங்கு வசித்து வருகிறார். அப்போது வருண் அம்மா கஸ்தூரியை 15 வருடங்களாக கடத்தி வைத்திருக்கும் உண்மைகளை காதம்பரியின் குடும்பத்திடம் கூறுகிறார். காதம்பரியின் தாயார் ருக்மணி அதை வருணின் தம்பி மனைவியான ஸ்ருதியிடம் சொல்ல, ஸ்ருதியோ அவர்களை மீட்டு வருணனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இதனால் ஸ்ருதயை வீட்டில் உள்ள அனைவரும் நம்பத் தொடங்குகின்றனர். குறிப்பாக வருண் அம்மா கஸ்தூரி மிகவும் நம்புகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அய்யா காய்கறி பெயரை இங்கிலிஷ்-ல சொல்லாதீங்க..அந்தோணி தாஸை மரணமாக கலாய்த்த புகழ்

உன் வேலைய பாத்துட்டு போ.! வருணுக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.! கதறி அழும் சக்தி.! 3

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீ விபத்தை மீண்டும் நிகழச் செய்தால் வருண் குணம் ஆகி விடுவார் என்று சக்தி சொல்கிறார். ஆனால் ஸ்ருதியோ மீண்டும் அந்த நிகழ்வை செய்து அத்தையை கொலை செய்ய பார்க்கிறாயா? என்று கஸ்தூரியின் மனதை மாற்றுகிறார். இதனால் குழப்பத்தில் அமர்ந்திருக்கிறார் கஸ்தூரி. பின்னர் மீண்டும் இரவு கஸ்தூரியிடம் வந்து தீ விபத்து எப்படி நடந்தது என்று சில கேள்விகளை கேட்கிறார். அதற்கு கோபமான கஸ்தூரி, இதெல்லாம் தெரிந்து கொண்டு இப்பொழுது நீ என்ன செய்து விடப் போகிறாய்? வருணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவரது தந்தைக்குத் தெரியும். அவருனுடைய அம்மா அப்பா தம்பி அனைவரும் இருக்கிறோம், எங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு அப்படி என்ன? என்று சொல்லி கோபமாக கேட்டுவிட்டு போய் உன் வேலையை பார் என்று திட்டி அனுப்பி விடுகிறார்.

விளம்பரம்

உன் வேலைய பாத்துட்டு போ.! வருணுக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.! கதறி அழும் சக்தி.! 5
இதனால் சோகமான சக்தி மீண்டும் தருணிடம் சென்று தகவல்களை கேட்டுப் பெறுகிறார். தருணும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அனைத்தையும் கூறுகிறார். சக்தி கஸ்தூரி இருக்கும் இடத்தில் தான் இருந்து கொண்டு அந்த நிகழ்வை திருப்பி செய்து காட்ட முடிவெடுத்து இருக்கிறார். அந்த தீயில் தான் இறங்கி வருணை காப்பாற்ற முடிவு செய்து இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment