பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதை ஜனனி தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் இன்று கருப்பு நிற புடவையில் அவர் நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸில் இலங்கை சேர்ந்தவர்களை கலந்து கொள்ள வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் இலங்கையை சேர்ந்த ஜனனியை பிக்பாஸ் சீசன் 6ல் காலம் இறக்கி இருந்தது பிக்பாஸ். ஜனனி இலங்கையில் இருக்கும் பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். மேலும் இலங்கையில் இருக்கும் பிரபல உணவகங்களுக்கு சென்று உணவை ருசி பார்க்கும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜனனி தொடர்ந்து டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வந்தார். ஜனனிக்கு பிக்பாஸ்ஸுக்கு முன்னர் 50ஆயிரம் பின் தொடர்பவர்கள் இருந்தார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் இன்னார் சுமார் ரெண்டு லட்சம் பேர் பின் ஜனனியை தொடர்கிறார்கள். தற்போது அவருக்கு ப்ளூ டிக் கொடுத்து பிரபலமாக இன்ஸ்டாகிராம் அங்கீகரித்துள்ளது. பொதுவாக இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைத்தது உண்டு. அது போல ஜனனியும் வெற்றி பெற வேண்டும் என பலரும் விரும்பினர்.


ஆனால் விளையாட்டில் ஆர்வம் குறைந்த காரணத்தினால் ரசிகர்கள் அனைவரும் ஜனனிக்கு குறைந்த வாக்குகளை அளித்து அவரை தற்போது வீட்டில் இருந்து வெளியேற்றி இருந்தனர். வெளியே வந்த அவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனதற்காக மன்னிப்பும் கோரி இருந்தார். இந்த நிலையில் வெளியே வந்த பின்னர் அவர் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். கருப்பு நிற புடவையில் செம்ம cute ஆக இருக்கிறார் ஜனனி. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் மேக்அப் போட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.. !
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7