காந்தாராவாக மாறி சந்தியாவை காப்பாற்றும் சரவணன்.! பரபரப்பான ராஜா ராணி ப்ரோமோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றான ராஜா ராணி சீசன் 2 வின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட சந்தியாவை மீட்பதற்காக காந்தாராவாக மாறியிருக்கிறார் சரவணன். அந்த ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜா ராணி சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. சீசன் 1-ஐ பொறுத்த வரை வேலைக்காரியாக வரும் செம்பாவை வீட்டின் உரிமையாளராக இருக்கும் கார்த்தி காதலித்து திருமணம் செய்து கொள்வார். அந்தத் தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதை பின்பற்றி தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொடர் ஹிந்தியில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான “என் கணவன் என் தோழன்” என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காந்தாராவாக மாறி சந்தியாவை காப்பாற்றும் சரவணன்.! பரபரப்பான ராஜா ராணி ப்ரோமோ.! 1
சீசன் 2வை பொறுத்தவரை இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு நன்கு படித்த பெண்ணான சந்தியாவை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். சந்தியாவிற்கு தான் எப்படியாவது போலீஸ் உயர் அதிகாரியாக ஆகிவிட வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் இதற்கு சந்தியாவின் மாமியார் சிவகாமி தடையாக இருக்கிறார். தனது தாய் சிவகாமியை சமாளித்து தனது மனைவி சந்தியாவை அவரது கனவுகளுடன் நோக்கி சரவணன் பயணிக்க வைக்கிறாரா? இல்லையா? ஐபிஎஸ் ஆக்குகிறாரா? என்பது தான் ராஜா ராணி சீசன் 2 வின் கதை. இந்த கதை ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. தற்போது இந்த கதையில் பல திருப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐபிஎஸ் ஆகி விட வேண்டும் என்று சந்தியா மிகத் தீவிரமாக இருக்கிறார். அதற்காக அவர் ட்ரெய்னிங்கிலும் ஈடுபட்டிருக்கிறார். தற்போது கதைப்படி தீவிரவாதிகள் அந்த ட்ரைனிங் கேம்புக்குள் புகுந்து விடுகின்றனர். போலீசாரின் ரகசியங்களை தெரிந்து கொண்டு அவர்கள் சில கோரிக்கைகளுடன் மிரட்டி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  வீட்ல எதாவது ஒரு வேலை பாக்கறியா? என்ன தப்பு சொல்ல வந்துட்ட? ரம்யாவை கழுவி ஊற்றிய தாமரை

காந்தாராவாக மாறி சந்தியாவை காப்பாற்றும் சரவணன்.! பரபரப்பான ராஜா ராணி ப்ரோமோ.! 3
குறிப்பாக சந்தியா இருக்கும் ட்ரைனிங் கேம்புக்கு தலைவராக இருந்த கௌரி மேடத்தையும், சந்தியாவின் கணவர் சரவணனையும் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் உயிருடன் மீட்க சந்தியா மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து விடுகிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சந்தியாவை தீவிரவாதிகள் மாண பங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். அப்போது ஹீரோ சரவணனுக்கு காந்தாரா படத்தில் வருவது போல சாமி வந்து விட்டது. முகம் எல்லாம் கருப்புடன் அவர் தீவிரவாதிகளை சூரசம்ஹாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment