தனது குரலையோ, புகைப்படத்தையோ, பெயரையோ தனது அனுமதி இன்றி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ரஜினியின் வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி அந்த தகவலை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தவும் அதை வர்க்க ரீதியில் பயன்படுத்தவும் அனுமதி இல்லை என்றும் அதை மீறி பயன்படுத்துபவருக்கு சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். தமிழ் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அவர் சுமார் 168 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது தனது 169 ஆவது படமான ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது அனுமதியில்லாமல் தனது புகைப்படத்தை பயன்படுத்துவோருக்கு திடீரென எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

அவருடைய வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் எண் 18 ராகவீரவா அவன்யூ, போயஸ் கார்டன், சென்னையில் வசிக்கும் எனது கட்சிக்காரர் சிவாஜி ராவ் கெய்ட்வர்ட் என்கிற ரஜினிகாந்த் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறா.ர் அவர் பல ஆண்டுகளாக பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். அவரை உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தை வழங்கியிருக்கின்றனர். திரையுலகம் முழுவதிலும் இருக்கும் அவரின் மரியாதை ஒப்பிட முடியாதது, மறுக்க முடியாதது. பல்வேறு தளங்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், படம் மற்றும் கேலிச்சித்திரம்,ம கணினி நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும் செயற்கை படங்கள் போன்றவற்றை தங்களை பிரபலப்படுத்துவதற்காக தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது தனது கட்சிக்காரர் (ரஜினிகாந்தின்) கவனத்திற்கு வந்திருக்கிறது.

மேலும் டிஜிட்டல் தளங்களில் தனது கட்சிக்காரரின் பெயர், புகைப்படங்கள் தோற்றம் ஆகியவை தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது பொது மக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த கூடும் என்று கருதுவதாகவும், எனவே எனது கட்சிக்காரரின் ஆளுமையை குறிக்கும் அனைத்து அம்சங்களிலும் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்துவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் உட்பட அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இதுவே தமிழகத்தின் பேசு பொருளாக இருக்கிறது அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: ABP Nadu