வர்ஷினியுடன் நிச்சயதார்த்தம் செய்த எழில்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அமிர்தா.!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் எழிலுக்கும், வர்ஷினிக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. திருமண மண்டபத்திற்கு வரும் அமிர்தா அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. கோபி தனது முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் தனியாக வசித்து வருகிறார். தாய் பாக்கியா மீது ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவரது மகள் இனியாவும் கோபி உடனே வசித்து வருகிறார். இனியா சென்று விட்டதால் அவருக்கு பாதுகாப்பாக இருக்க கோபியின் தந்தை ராமமூர்த்தியும் கோபியின் உடன் சென்று விட்டார். இதனால் பாக்யாவும் மீதமுள்ளவர்களும் தனியாக வசித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வர்ஷினியுடன் நிச்சயதார்த்தம் செய்த எழில்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அமிர்தா.! 1
இந்த நிலையில் பாக்யா வசித்து வரும் வீடு கோபியின் சொந்த முயற்சியால் கட்டப்பட்டது. கோபி வங்கியில் கடன் வாங்கி 40 லட்ச ரூபாய் செலவு செய்து அந்த வீட்டை கட்டி இருந்தார். இதனால் பாக்யாவிற்கும் கோபிக்கும் இந்த வீடு யாருடையது என்பதில் முரண் எழுந்தது. மேலும் வீட்டின் வெளியில் இருந்த கோபியின் பெயர் பலகையை எழில் பிடுங்கி எறிந்ததால் கோபி இன்னும் கோபமடைந்தார். இந்த வீட்டை இன்றைய மார்க்கெட் விலை 70 லட்சத்தை கொடுத்து வீட்டை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். எழுபது லட்சத்தை கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்வதாக எழிலும் கோபியிடம் சவால் விட்டுவிட்டார். ஆனால் 70 லட்சத்தை எவ்வாறு புரட்டுவது என்று எழிலுக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் எழில் வேலை பார்த்து வரும் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி தான் அந்த 70 லட்சத்தை கொடுத்து விடுகிறேன். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வெகு நாட்களுக்கு பிறகு இளைய மகளை சந்தித்த வனிதா.. அப்படியே வனிதா மாதிரியே இருக்காரே.!

வர்ஷினியுடன் நிச்சயதார்த்தம் செய்த எழில்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அமிர்தா.! 3
மேலும் வர்ஷினியும் எழிலின் பாட்டி ஈஸ்வரியை பிரைன் வாஷ் செய்து மாற்றி வைத்திருக்கிறார். ஈஸ்வரி பாட்டியும் எழிலிடம் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். இந்த சூழலுக்கு இடையில் அமிர்தாவை கழட்டி விட்டுவிட்டு தற்போது எழில் வர்ஷினியை திருமணம் செய்ய இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வர்ஷினிக்கும் எழிலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர். அங்கு வரும் அமிர்தா அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்க் இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment