விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மௌன ராகம் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்தத் தொடர் 2 சீசன்களாக நடந்து வருகிறது. முதல் சீசன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் கதையின் நாயகர் கார்த்திக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து விட்டதாக நினைத்து இரண்டாவதாக காதம்பரியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் முதல் மனைவியும் அவருக்கு பிறந்த பெண் குழந்தையும் உயிருடன் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் கதாநாயகனுடன் இணைந்து விடுகிறார்கள். ஆனால் இது இரண்டாவது மனைவி காதம்பரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் மூத்த மனைவி மற்றும் அவரது மகளை வெறுத்து வருகிறார். அவர்கள் இருவரையும் கொரை செய்ய கூட காதம்பரியின் குடும்பம் திட்டம் தீட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூத்த மனைவியின் மகள் சக்தி வருண் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவரது தம்பி தருணை, கார்த்தியின் இரண்டாவது மனைவி காதம்பரியின் மகள் சுருதி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் தொடர்ந்து கார்த்திக் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்து வருகிறது. காதம்பரியின் குடும்பம் எப்படியாவது கதாநாயகன் கார்த்திக்கிடமிருந்து மூத்த மனைவியை பிரித்து விட வேண்டும் என்று எண்ணி பல தீய செயல்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வரும் இந்த தொடரில் இவ்வளவு நாள் காணாமல் போய் இருந்த வருணின் அம்மா திரும்பி வந்து விட்டார். ஸ்ருதி சக்தி பற்றி வருணின் அம்மாவிடம் தப்பு தப்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வருணின் அம்மாவிற்கு சக்தி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் சக்தியை அவர் மிகவும் மரியாதையுடன் நடத்துகிறார். சமையல் தொடங்கி அனைத்திலும் ஸ்ருதியை காட்டிலும் சக்தியே வீட்டில் உள்ள அனைவரிடமும் பாராட்டுகளை பெறுகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குலதெய்வ கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்பு அம்மனின் நகைகள் வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அந்த பொறுப்புகள் அனைத்தையும் சக்தி மாமியார் சக்தியிடம் கொடுக்கிறார். இதனால் ஸ்ருதி மிகுந்த கோபத்துடன் சக்தியை வெறி கொண்டு பார்க்கிறார். இதனால் மீண்டும் சக்தியை கொலை செய்வதற்கோ அல்லது நகைகளை திருடி வைத்து நாடகம் ஆடுவதற்க்கோ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
YouTube Video Embed Code Credits: Vijay Television