8 வயதில் என்னை பெற்ற தந்தையே என்னை வன்கொடுமை செய்தார்.! வேதனையுடன் பேசிய குஷ்பூ.!

தமிழில் 80, 90களில் முன்னணி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் என்று பல தளங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் குஷ்பூ தனது தந்தை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் எட்டு வயதிலேயே தான் தன்னுடைய தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் 15 வயதில் அவர் தன்னை வீட்டில் இருந்து விரட்டி அடித்து விட்டதாகவும் குஷ்பூ அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். தேசிய மகளிர்ஆணையத்தின் உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற குஷ்பூ, தற்போது பல தொலைக்காட்சிகளில் விவாதங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் படிக்காத ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணான தனது தாயை தனது தந்தை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், அதேபோல் சிறு வயதில் இருந்தே தன்னை தனது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

8 வயதில் என்னை பெற்ற தந்தையே என்னை வன்கொடுமை செய்தார்.! வேதனையுடன் பேசிய குஷ்பூ.! 1
16 வயதில் தான் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாகவும், கடந்த 35 ஆண்டுகளாக நான் தனது தந்தையை பார்த்தது கூட இல்லை. அவரை தந்தை என அழைக்கவே எனக்கு துளியும் விருப்பமில்லை, அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை சமீபத்தில் கிடைத்தது, அப்பொழுது அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன், அவரை எனக்கு தந்தை என்று அழைக்க கூட விருப்பம் இல்லை என்று பேசி இருந்தார். தந்தையிடமிருந்தே இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்த பிறகு மற்ற ஆண்களை நம்புவதற்கு எனக்கு நிறைய காலம் ஆனது என்றும் அந்த பேட்டியில் குஷ்பூ பேசி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் பள்ளி மாணவிகள் மத்தியில் நடைபெற்ற ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பெண்கள் பாலியல் ரீதியான மேற்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். அப்போது ஆண்கள் என்றால் தனது மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தலாம், சொந்த மகளையே பாலியல் ரீதியாக துன்புறுத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் தான் என்னுடைய தந்தை. 15 வயதில் அவரை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கினேன்.

விளம்பரம்
தொடர்புடையவை  "லொகேஷன் அனுப்புங்க இளவரசி"!! "குந்தவையை கலாய்க்கும் வந்தியத்தேவன்"!!

8 வயதில் என்னை பெற்ற தந்தையே என்னை வன்கொடுமை செய்தார்.! வேதனையுடன் பேசிய குஷ்பூ.! 3

எனது தாயார் தாலி கட்டிய கணவர் தான் கடவுள் என்பது போல எண்ணிக் கொண்டிருந்தார். அவரிடம் இது பற்றி கூறினால் எங்கு தன்னை நம்ப மாட்டாரோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன்் ஆனால் சரியான தருணம் வந்ததும் அது குறித்து பேசினேன். இதனால் எனது தந்தை எங்களை நடுத்தெருவில் விட்டு விட்டு அவர் வெளியேறி விட்டார். மூன்று அண்ணன்கள் உடன் நானும் எனது தாயாரும் அடுத்த வேலை உணவிற்காக கூட மிகப்பெரிய கஷ்டப்பட்டோம். அதன்பின்னர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தோம் என்று பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எட்டு வயதில் தனது சொந்த தந்தையாலேயே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார் குஷ்பூ. இந்த செய்தியை கேட்ட பின்பு பலரும் குஷ்பூவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Mojo Story

விளம்பரம்

Leave a Comment