நடு ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்த சரவணன்..! உயர் அதிகாரியிடம் வசமாக மாட்டிய சந்தியா.!

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் சந்தியா வேலை பார்க்கும் உயர் அதிகாரியின் மகனை நடுரோட்டில் வைத்து அடித்து விடுகிறார். இதனால் கோபமான உயர் அதிகாரி சந்தியாவை வீட்டிற்கு வரவழைத்து மிரட்டுகிறார். இந்த ப்ரோமோ இன்றைக்கு வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் போது தொடர் தான் ராஜா ராணி. இந்த தொடர் சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண இனிப்பு கடை நடத்தி வரும் சரவணன் தனது தாயார் சிவகாமி மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு படிக்காத பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது தாயார் சிவகாமி முயற்சி செய்து கொண்டிருக்க, சந்தியாவை படிக்காத பெண் என்று சொல்லி ஏமாற்றி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மேலும் சந்தியா தான் ஒரு போலீஸ் உயர் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். இது ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது் பின்னர் அவர் தடைகளை தாண்டி ஐபிஎஸ் ஆனார் என்பதுதான் நாடகத்தின் கதை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடு ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்த சரவணன்..! உயர் அதிகாரியிடம் வசமாக மாட்டிய சந்தியா.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி சந்தியா ஐபிஎஸ் ஆகிவிட்டார். பல தடைகளை மீறி அவர் இந்த பதவியை அடைந்திருக்கிறார். நாடகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் கதையிலிருந்து தொடர்ந்து விலகல்கள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் சந்தியாவாக நடித்து வந்த ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் விலகினார். அதன் பின்னர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனும் தற்போது விலகி இருக்கிறார். இதனால் சந்தியாவாக ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா நடித்து வருகிறார். மேலும் சீரியலில் இருந்து வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் அர்ச்சனா ஏற்கனவே விலகி இருந்தார். பின்னர் இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இருதபோதிலும் கதை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பலர் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தி விட்டதாக கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  Biggbossல் இருந்து வெளியேறி 2 வாரங்களுக்கு பின்னர் முதல் முறையாக லைவ் வந்த மக்கள் நாயகன் அசீம்.!

நடு ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்த சரவணன்..! உயர் அதிகாரியிடம் வசமாக மாட்டிய சந்தியா.! 3
தற்போது கதைப்படி சந்தியா வேலை பார்த்து வரும் உயர் அதிகாரியின் மகன் அடியாட்களை வைத்து ஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் சரவணன் அதை தடுத்து நிறுத்தி அந்த உயர் அதிகாரியின் மகனை போட்டு அடி பிரித்தெடுக்கிறார். பின்னர் தனது மகனை அடித்தது சந்தியாவின் கணவர் என்று தெரிந்து கொள்ளும் உயர் அதிகாரி போனை போட்டு சந்தியாவை வீட்டிற்கு வரச் சொல்கிறார். இதனால் சந்தியா மீது அவர் ஏதும் நடவடிக்கை எடுப்பாரா என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment