பிரபல youtubeராக இருக்கும் டிடிஎஃப் வாசன் மீது தற்போது புதிதாக வழக்கு ஒன்று பதியப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றிய நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஐயப்பன் ராமசாமி குறித்து TTF வாசன் பேசிய காணொளி இணையத்தில் வைரலான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இணையத்தை அதிர வைக்கும் ஒரு செய்தி என்றால் ஒரு குறிப்பிட்ட கட்சியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றவர்களை தாழ்த்தும் வேலையில் ஈடுபடுவதாக யூடியூபர்கள் மீது ஆதாரத்துடன் மதன் ரவிச்சந்திரன் என்பவர் வீடியோக்களை வெளியிட்டு பகிரங்க குற்றம் சாட்டியிருந்தார். இதில் வளர்ந்து வரும் பத்திரிக்கையாளராக இருக்கும் ஐயப்பன் ராமசாமி உட்பட பலரும் சர்ச்சையில் சிக்கியிருந்தனர். இதில் ஐயப்பன் ராமசாமி மீது ஏற்கனவே செம கடுப்பில் இருக்கும் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பைக்கில் அதிவேகமாக சென்று அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு நபராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் ஒரு பேட்டியில் ஐயப்பன் ராமசாமியிடம் மாட்டிக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து வெளியேறினார். இந்த கோபத்தை மனதில் வைத்திருந்த வாசன் தற்போது ஐயப்பன் சாமி மீது முழுவதுமாக தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இதுபோன்று பணத்தை வாங்கிக் கொண்டு ஒருவர் மீது அபாண்டமாக பழி சொல்பவர்கள் பெயரே வேறு, இதுபோல பெரிய பெரிய தவறு செய்பவர்களையெல்லாம் விட்டுவிட்டு என்னை போல் சின்ன தவறு செய்தவர்களை பெரிதாக்குகிறீர்கள். ஐயப்பன் ராமசாமிக்கு எல்லாம் மரியாதையே கிடையாது, அவன் வயசுக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வரவில்லை, பெண்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூட ஐயப்பன் ராமசாமிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லையே? இதே வார்த்தையை நான் சொல்லியிருந்தால் எல்லாம் டிடிஎஃப் இப்படி பேசிவிட்டார் என்று கிளம்பி இருப்பார்கள்.

மேலும் ஐயப்பன் ராமசாமி என் கையில் மட்டும் கிடைத்தால் அவன் மூஞ்சி முகரை எல்லாம் உடைத்து விடுவேன், அவன் மீது மிகுந்த வெறியில் இருக்கிறேன். நான்கு பத்திரிக்கையாளர்கள் மாட்டினார்கள், ஆனால் ஐயப்பன் மீது மட்டும்தான் என்னுடைய கோபம் எல்லாம். என்ன டிடிஎஃப் நேரம் பார்த்து பழி வாங்குகிறாயா என்று நீங்கள் கேட்கலாம், ஆமாம் நேரம் பார்த்து தான் பழிவாங்குகிறேன். அவன் மீது வெறியோடு இருக்கிறேன் என்று கோபமாக பேசியிருந்தார். இந்த காணொளி இணையத்தில் வைரலாக தொடங்கியது. பலரும் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர், சிலர் இது தான் சாக்கு என்று நீ யோக்கியன் மாதிரி பேசாதே, நீயும் அதே போல ஒருவன் தான் என்று சிலர் டிடிஎஃப் வாசனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது கோவை காரமடை போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் டிடிஎஃப் வாசன் ஐயப்பன் ராமசாமிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Reflect News Tamil