சுடர் பாப்பாவுக்கு நடந்த பயங்கர விபத்து.! அப்பளம் போல நொறுங்கிய கார்.! கதறி அழும் வெற்றி.!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தற்போது சுடர் பாப்பாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி காரிலேயே கிடக்கிறார். இந்த செய்தி கேட்ட வெற்றி துடித்து துடித்து போய் கதறி அழுது கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடரில் நடிகர் வினோத் பாபு வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாகவும், நடிகை பவித்ரா அபி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் பிரபல வக்கீலின் மகளாக இருக்கிறார் அபி. இவர் ஒரு முறை கோவிலில் சாமி கும்பிட சென்றபோது, அங்கு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் வெற்றியை தட்டி கேட்கிறார். அப்போது வெற்றி அபியின் கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார். இங்கிருந்து இந்த கதை தொடங்க ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளாத வெற்றியின் குடும்பம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அபியை ஏற்றுக்கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுடர் பாப்பாவுக்கு நடந்த பயங்கர விபத்து.! அப்பளம் போல நொறுங்கிய கார்.! கதறி அழும் வெற்றி.! 1

விளம்பரம்

அபியின் அப்பா எவ்வளவோ முறை சொல்லியபோதும் தாலியை கழட்டாமல் வெற்றியுடன் தான் குடும்பம் நடத்துவேன் என்று சொல்லி வெற்றியின் வீட்டிற்கு சென்று விடுகிறார் அபி. பின்னர் இந்த நாடகம் ஓரளவிற்கு முடியும் தருவாயில் இருந்தபோது, கதையில் திடீர் திருப்பமாக வேறு களத்திற்கு மாற்றி இருக்கின்றனர். அதில் வெற்றிக்கும் அபிக்கும் சுடர் என்கிற குழந்தை பிறந்து இருப்பதாகவும், அபி கலெக்டராக மாறியிருப்பதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது வெற்றியும் சுடரும் எதேச்சையாக சந்தித்துக் கொள்ள, பின்னர் இருவரும் நண்பர்கள் ஆகிப் போகின்றனர். தனது மகள் என்று தெரியாமல் வெற்றி சுடர் மீது பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறார். அப்பா வெற்றிதான் என்று தெரியாமல் சுடரும் வெற்றியுடன் நெருங்கி பழகி வருகிறார். தற்போது இவர்கள் இருவரின் பாசத்திற்காகவே இந்த கதையை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் வெற்றி தன்னுடைய மகள் தான் சுடர் என்பதை தெரிந்துகொள்ளும் தருணத்திற்காக பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடையவை  முத்துவை பிரிந்து தனது அம்மாவுடன் சென்ற மீனா.! இனிமே ஒரு மாசம் இப்படித்தான்.!

சுடர் பாப்பாவுக்கு நடந்த பயங்கர விபத்து.! அப்பளம் போல நொறுங்கிய கார்.! கதறி அழும் வெற்றி.! 3
தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அபியும் சுடரும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது எதிரிகள் லாரியை ஏற்றி காரின் மீது மோத செய்து விடுகின்றனர். இதனால் பயங்கர விபத்துக்குள்ளான கார் அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறது. சுடரும் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெற்றிக்கு இந்த விஷயம் தெரிய வர வெற்றி துடிதுடித்து கதறி அழுகிறார். தற்போது இதன் மூலமாக வெற்றியும் சுடரும் தந்தை மகள் என தெரிந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment