எல்லாமே சரியா இருக்குன்னா அப்போ அங்க எதோ தப்பு இருக்கு.! சரவணனை கையும் களவுமாக பிடிக்கும் சந்தியா.!

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விக்கி என்கிற ரவுடியை கொலை செய்த மாமியார் மற்றும் கணவர் சரவணனை சந்தியா கண்டுபிடித்து விடுவார் என்று தெரிகிறது. அவருக்கு முதல் துப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. அதை வைத்து வீட்டில் உள்ள அனைவரையும் சந்தியா விசாரணை நடத்துகிறார். ராஜா ராணி சீசன் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த தொடரில் பல தடைகளை மீறி சந்தியா தற்போது போலீஸ் அதிகாரியாக ஆகியிருக்கிறார். இவர் போலீசான முதலே வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து வருகிறது. தனது கணவரின் தம்பியான ஆதி தனது மனைவியின் நகையவே திருடி இருந்தார். அந்த விஷயத்தை தற்போது சந்தியா கண்டுபிடித்தார். மேலும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு அவர் கடத்தலில் ஈடுபட்டதையும் சந்தியா தற்போது கண்டுபிடித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாமே சரியா இருக்குன்னா அப்போ அங்க எதோ தப்பு இருக்கு.! சரவணனை கையும் களவுமாக பிடிக்கும் சந்தியா.! 1

விளம்பரம்

இந்த நிலையில் சந்தியாவின் நாத்தனார் பார்வதியின் கணவர் மற்றும் பார்வதியை வில்லன் ஒருவர் கடத்தி வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அந்த வில்லனை சந்தியாவின் மாமியார் தலையில் கட்டையால் அடிக்கிறார். இதனால் அந்த வில்லன் மரணம் அடைந்து விடுகிறார். இந்த விஷயம் வந்து சரவணனுக்கு தெரிய வர, அவர் அந்த உடலை எடுத்துக் கொண்டு காட்டுப் பக்கம் சென்று யாருக்கும் தெரியாமல் எரித்து விடுகிறார். இந்த கேஸை உயர் அதிகாரி சந்தியாவிடம் ஒப்படைக்க சந்தியாகவும் விசாரணையை தொடங்குகிறார். அதில் அந்த வில்லனின் மொபைல் போனிலிருந்து கடைசியாக சந்தியாவின் நாத்தனார் பார்வதிக்கு தான் கால் சென்றிருக்கிறது. இதனால் அவருக்கு முதல் துப்பு கிடைக்க, தனது வீட்டில் உள்ளவர்களை விசாரிக்கத் தொடங்குகிறார். நாத்தனார், அவரின் கணவன் என அனைவரிடமும் விசாரணை நடத்துகிறார் சந்தியா.

தொடர்புடையவை  தவறை உணர்ந்த முத்து..! மீனாவிடம் மன்னிப்புக்கேட்டார்..! கொஞ்சி விளையாடிய இருவரை கண்டு கடுப்பாகிய விஜயா..!

எல்லாமே சரியா இருக்குன்னா அப்போ அங்க எதோ தப்பு இருக்கு.! சரவணனை கையும் களவுமாக பிடிக்கும் சந்தியா.! 3
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சந்தியாவிற்கு முதல் க்ளூ ஒன்று கிடைக்கிறது. இதனால் சந்தியாவிற்கு தனது வீட்டில் உள்ளவர்களிடமும் குறிப்பாக சரவணன் மீதும் சந்தேகம் வருகிறது. விரைவில் சரவணன் மற்றும் மாமியார் சிவகாமியிடம் தனது விசாரணையை சந்தியா துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment