இந்த வாரம் Tri கலர் challenge கொடுத்த நடுவர்கள்.! புகழை அடித்து துவைத்த ஸ்ருஷ்டி.! செம்ம அலப்பறை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது நடுவர்கள் மூன்று கலர் உணவு சமைக்கும்படி டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கின்றனர். இந்த டாஸ்க்கால. ஸ்ருஷ்டிக்கும் புகழுக்கும் மீண்டும் சண்டை எழுந்துள்ளது. இந்த வாரமும் சிருஷ்டியும் புகழும் தான் Pair ஆகியிருக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால் இந்த வாரத்திலும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. வார இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பலரையும் மன அழுத்தத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த ஒரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. தற்போது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் Tri கலர் challenge கொடுத்த நடுவர்கள்.! புகழை அடித்து துவைத்த ஸ்ருஷ்டி.! செம்ம அலப்பறை.! 1
பத்து குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு குக்குகளுடன் சுருங்கி இருக்கிறது. மொத்தம் நான்கு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இயக்குனர் கிஷோர், மதுரை காளையன், ராஜ் ஐயப்பன், விஜே விஷால் என்று நான்கு ஆண் போட்டியாளர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர். தற்போது சிவாங்கி, ஷெரின், ஸ்ருஷ்டி, விசித்ரா, மைம் கோபி, ஆண்ட்ரியன் என்று ஆறு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் மூன்று சீசன்களில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர். அவர்களை மூவரும் இம்யூனிட்டியை வென்றால் இந்த நான்காவது சீசனில் இருக்கும் ஆறு குக்குகளும் எலிமினேஷன் ரவுண்டுக்கு செல்ல தகுதியானவர்கள் என்று வெங்கடேஷ் பட் அறிவிக்கிறார். முதல் சீசனிலிருந்து ரேகா, இரண்டாவது சீசனில் இருந்து ஷகீலா, மூன்றாவது சீசன் இருந்து ரோஷினி ஹரிப்பிரியன் ஆகிய மூவர் வந்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரோபோ ஷங்கர்.! குடும்பத்துடன் குத்தாட்டம்.!

இந்த வாரம் Tri கலர் challenge கொடுத்த நடுவர்கள்.! புகழை அடித்து துவைத்த ஸ்ருஷ்டி.! செம்ம அலப்பறை.! 3
இந்த நிலையில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் மூன்று கலர் சேலஞ்ச் வைக்கப்பட்டுள்ளது. சிகப்பு, பச்சை, வெள்ளை என்று மூன்று கலர் சேலஞ்ச் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த சீசன்களில் இந்த சேலஞ்ச் மிகப் பிரபலம். மதுரை முத்து கூட வெள்ளை கலர் சேலஞ்சில் தோற்று தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த வாரமும் ஸ்ருஷ்டி புகழ் காம்பினேஷன் வந்துள்ளது. அதில் ஸ்ருஷ்டி தனக்கு வெள்ளை கலர் வேண்டும் என்று கேட்க, புகழ் பச்சை கலரை தொட்டு விடுகிறார். இதனால் கோபமான ஸ்ருஷ்டி புகழை அடித்து வெளுக்கிறார். மேலும் அந்த கலர் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த கலர் அனைத்தையும் எடுத்து புகழின் தலையில் கொட்டுகிறார். செம காமெடியாக வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment