ஸ்ருஷ்டியா? ஷெரினா? இந்த வாரம் வெளியே போனது யாருனு தெரியுமா.? அதிரடி காட்டிய CWC டீம்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் பற்றி தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீசன் போரின் ஆறாவது எலிமினேஷன் ஆக பெண் போட்டியாளர் ஒருவர் இந்த சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறார். தமிழில் ரியாலிட்டி ஷோக்களில் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. மூன்று சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது ஐந்து போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. ராஜ் ஐயப்பா, காளையன், விஜே விஷால், கிஷோர் என மொத்தம் நான்கு ஆண் போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் தற்போது ஐந்தாவது எலிமினேஷனும் நடைபெற்று இருக்கிறது.

ஸ்ருஷ்டியா? ஷெரினா? இந்த வாரம் வெளியே போனது யாருனு தெரியுமா.? அதிரடி காட்டிய CWC டீம்.! 1
இந்த வாரம் ஐஸ் கோலா செய்யும் அட்வான்டேஜ் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. முதல் டாஸ்க்கில் அதிக அளவிலான ஐஸ் கோலாவை செய்து விசித்ரா, மைம் கோபி, மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தனர். இதில் இரண்டாவதாக கோமாளிகளுக்கு கண்ணை கட்டிக்கொண்டு ஜூஸ் குடிக்க வைக்கும் சேலஞ்ச் வைக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்தந்த கோமாளிகளின் குக்குகளே ஜூஸை கொடுக்காமல் வேறு குக்குகளை வைத்து ஜூஸை கொடுக்க வைத்திருந்தனர். இதில் விசித்ராவின் கோமாளியாக இருந்த ரவீனாவிற்கு மைம் கோபி ஜூஸ் கொடுத்தார். அதை வெண்டைக்காய் ஜூஸ் என்று சரியாக கண்டுபிடித்து இருந்தார் ரவீனா. பின்னர் ஆண்ட்ரியாவின் கோமாளியான புகழுக்கு விசித்ரா ஜூஸ் கொடுத்தார். ஆனால் அதை அவரால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல் ஆண்ட்ரியன் மைம் கோபியின் கோமாளியான குரேஷிக்கு கொடுத்த ஜூஸையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ரவீனாவின் குக்கான விசித்ரா அட்வான்டேஜ் வென்றிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  காதல் திருமணத்தால் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்த தந்தை.! அழைத்து வந்த சூப்பர் சிங்கர் குழுவினர்.!

ஸ்ருஷ்டியா? ஷெரினா? இந்த வாரம் வெளியே போனது யாருனு தெரியுமா.? அதிரடி காட்டிய CWC டீம்.! 3
இந்த நிலையில் இன்று அசைவ உணவுகள் சமைக்க வைக்கும் சேலஞ்ச் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சேலஞ்சில் கடைசி மூன்று இடத்தில் சிவாங்கி ஷெரின் சிருஷ்டி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் இறுதியாக சிருஷ்டி மற்றும் சிவாங்கி ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். ஷெரினுக்கு அலர்ஜி இருந்ததாலும், அவரால் சரியாக சமைக்க முடியாத காரணத்தினாலும் அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேறும் முன்பாக கண்கலங்கி பேசிய அவர் இந்த நிகழ்ச்சி மூலமாக தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும், நிறைய நண்பர்கள் கிடைத்ததாகவும் கண்கலங்கி பேசியிருந்தார். அதேபோல புகழ் பேசும்பொழுது ஷெரின் கெட்டப் போட்டதற்கு பின்பாக தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், எப்பொழுது ஷெரின் இரண்டாம் பாகம் போடுவீர்கள் என்று தன்னிடம் கமெண்டில் அவ்வளவு பேர் கேள்வி எழுப்பி வருவதாகவும் சோகத்துடன் பேசினார். இதை பார்த்து ஆண்ட்ரியன், விசித்ரா, சிருஷ்டி உள்ளிட்ட பலரும் கண் கலங்கினர். கண்ணீருடன் ஷெரினும் விடை பெற்றுக் கொண்டார்.

விளம்பரம்

Leave a Comment