குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஆண்ட்ரியன் வெளியேறியது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது அது குறித்து விளக்கம் அளித்து ஆண்ட்ரியன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். எமோஷனலாக பதிவிட்டிருக்கும் அந்த பதிவிற்கு கீழே பலரும் ஆண்ட்ரியனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோக்கள் சிலது தான் இருக்கின்றது. அந்த வகையில் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான். இது தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, சிருஷ்டி, ஷெரின், ஆண்ட்ரியன், ராஜ் ஐயப்பன், கிஷோர் ராஜ்குமார், காளையன், மைம் கோபி என பலரும் குக்குகளாக கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். இதில் பலர் வெளியேற்றப்பட்டு விட மீதம் டாப் 5 மட்டுமே இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆண்டி வெளியேற்றப்பட்டார். பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் ரஜினி முருகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் இறுதி போட்டியாளராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஆண்டியை எலிமினேட் செய்து வெளியில் அனுப்பி இருந்தனர். மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி, அடிக்கடி சமையலில் சொதப்பும் சிருஷ்டி ஆகியோர் இருக்கும்பொழுது ஆண்டியை வெளியேற்றியது கொஞ்சமும் நியாயம் இல்லை என்று பலரும் கருத்துக்களை கூறி வந்தனர். இதை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தனது வெளியேற்றத்திற்கு நான் மட்டுமே காரணம், வேறு யாரும் காரணமல்ல என்னுடன் சமைக்கும் சக குக்குகள் அனைவரும் அந்த இடத்திற்கு செல்ல தகுதியானவர்கள்.

அன்றைய தினம் குக் வித் கோமாளியில் என்னுடைய தினமாக இல்லை. அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தருணங்களையும் நான் நேசித்தேன். எனக்கு இவ்வளவு அன்பையும் ஆதரவையும் கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அனைத்திற்கும் மிக்க நன்றி. நான் இன்னும் அதிக மன தைரியத்துடன் மீண்டும் வருவேன், இந்த போட்டியில் என்னால் முடிந்தவற்றை செய்வேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்பது முழுவதும் அன்பு மற்றும் நட்பினால் நிறைந்தது. இந்த நிகழ்ச்சியை பார்க்கவும் கமெண்ட் செய்யவும் மறந்து விடாதீர்கள். நாம் சீக்கிரமே சந்திப்போம் என்று அவர் மிகப்பெரிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே பலரும் ஆண்டியின் வெளியேற்றம் நியாயமானது இல்லை என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் ஆண்டி வைல்ட்கார்டு என்ட்ரியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!