மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்.! ஐஸ்வர்யாவுக்கு அவசர அவசரமாக வளைகாப்பு செய்த தனம்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மருத்துவர் தனத்திற்கு கேன்சர் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். தொடர்ந்து விரைவில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டு தனத்திற்கு ரேடியேஷன் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் தனம் மீனாவிடம் “ஒரு வாரம் மட்டும் நேரம் கொடு, எனக்கு சில கடமைகள் இருக்கிறது. அதை முடித்துவிட்டு நான் வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மைகளை கூறி விடுகிறேன்” என்று சத்தியம் வாங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கூட்டு குடும்பத்தின் அருமையையும், அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையையும் விளக்கும் இந்த தொடரில் தற்போது அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. மூத்த மருமகள் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்.! ஐஸ்வர்யாவுக்கு அவசர அவசரமாக வளைகாப்பு செய்த தனம்.! 1
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு மருமகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மருமகள் தனம், மூன்றாவது மருமகள் முல்லை, நான்காவது மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் அடுத்தடுத்து கர்ப்பம் ஆகியிருந்தனர். இதில் முல்லைக்கு தற்போது விபத்து ஒன்றில் கீழே விழுந்து வயிற்றில் பலமாக அடிபடுகிறது. அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. தொடர்ந்து தனம் மற்றும் கடைசி மருமகள் ஐஸ்வர்யா இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வரும் மூத்த மருமகள் தனம் மருத்துவரை அணுகுகிறார். அப்போது அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் கண்டுபிடிக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மார்பகப் புற்றுநோய் காக ரேடியேஷன் கதிர்வீச்சு சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்காக குழந்தையை அறுவை சிகிச்சை செய்து இப்போதே வெளியே எடுத்து விட வேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்துகிறார். இதனால் மீனாவிடம் ஒரு வாரம் மட்டும் நேரம் கொடுக்குமாறும், அதுவரை வீட்டில் உள்ள யாரிடமும் இது குறித்து பேச வேண்டாம் என்றும் தனம் சத்தியம் வாங்குகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "சாண்டியை வாழ விடுங்க யா" கோபத்தில் கொந்தளித்த நடிகை காஜல் பசுபதி.! இதுதான் காரணமா?

மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்.! ஐஸ்வர்யாவுக்கு அவசர அவசரமாக வளைகாப்பு செய்த தனம்.! 3
இந்த ஒரு வார காலத்திற்குள் கடைசி மருமகள் ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நடத்தி தனது கடமைகளை முடித்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரிடமும் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறி, பின்பு சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டு கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பிக்க தனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது தனது நோயையும், வலியையும் பொருட்படுத்தாமல் தனது கடமையை நிறைவேற்ற ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு நடத்தும் தனம் குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment