ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சி விரைவில் மறுபடியும் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு பழனியப்பன் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வந்த ஒருவர் வழங்க இருப்பதாக புது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா என்கிற நிகழ்ச்சியை பார்த்து அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா நிகழ்ச்சி. எதிரெதிர் கருத்துக்களை கொண்ட நபர்களை எதிரெதிரே அமர வைத்து அவர்களுக்கிடையே விவாதத்தை ஏற்படுத்தி அதற்கு ஒரு தீர்வை வழங்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியை இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். பார்த்திபன் கனவு என்கிற படத்தை இயக்கியவர் கரு பழனியப்பன். பின்னர் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். சில படங்களில் நடிகராகவும் அவர் அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கரு பழனியப்பன். அவர் மீது சில விமர்சனங்களும் இருக்கிறது. அவருக்கு பிடிக்காத எதிர்க் கருத்துக்களை யாராவது கூறினால் அவர்களை அதட்டி அடக்கி வைத்து விடுவார் என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் கோபிநாத்தை பார்த்து நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று கற்றுக் கொள்ளவும் கரு பழனியப்பனுக்கு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் ஒருநாள் தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தனது twitter பக்கத்தில் அறிவித்திருந்தார் கரு பழனியப்பன், “ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது, நன்றி ஜீ தமிழ்” என்று பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். அவர் விலகிய இரண்டு மாதங்களாக இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாமல் இருந்து வந்தது. மீண்டும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

பிரபல தனியார் ஊடகத்தில் பணிபுரிந்து வந்த நிகழ்ச்சி தொகுப்பாளரும், அரசியல் நெறியாளருமான ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரை பேட்டி எடுத்ததன் மூலமாக பிரபலமானவர் ஆவுடையப்பன். இவர் பல சூடான பேட்டிகளை கூட எளிதாக கையாள்வார். தற்போது கரு பழனியப்பனுக்கு பதிலாக ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. தமிழா தமிழா நிகழ்ச்சியை விட்டு விலகிய கரு பழனியப்பன் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் வா தமிழா வா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஆவுடையப்பனை வைத்து புது ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Zee Tamil