CWC -ன் டைட்டிலை வென்றது யார் தெரியுமா? 2வது, 3வது இடம் பற்றிய தகவலும் வெளியானது.!

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் முதலிடம் பிடித்த நபர் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு முதலிடத்தை தற்போது ஒரு ஆண் போட்டியாளர் வெற்றி பெற்றிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்திருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. மூன்று சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் 10 போட்டியாளர்களுடனும், பின்னர் வைல்ட் கார்டில் இரண்டு போட்டியாளர்களும் என மொத்தம் 12 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கடைசி நாள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு இருப்பதால் இந்த சீசனின் வின்னர் யார் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

CWC -ன் டைட்டிலை வென்றது யார் தெரியுமா? 2வது, 3வது இடம் பற்றிய தகவலும் வெளியானது.! 1
விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி ஆகி இருந்தனர். விசித்ரா முதல் பைனலிஸ்ட்டாக இந்த நிகழ்ச்சியில் உள்ளே சென்றிருந்த நிலையில், அடுத்ததாக மைம் கோபி, சிருஷ்டி, சிவாங்கி, கிரண் என ஐந்து பேர் முதலிலேயே தேர்வாகியிருந்தனர். பின்னர் நடந்த வைல்ட் கார்டு என்ட்ரியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன் வெற்றி பெற்று ஆறாவது குக்காக உள்ளே சென்றிருந்தார். இந்த நிலையில் இந்த வாரம் இறுதி சுற்றுக்கான ஷூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இது குறித்து அறிவித்திருந்த சிவாங்கி கடைசி நாள் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது, கனத்த இதயத்துடன் குட் பை சொல்கிறேன், இனி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை என்று பதிவிட்டு இருந்தார். இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  முறுக்கு பிழியிரத்துக்குள்ள சிவாங்கிக்கு கண்ணு முழி எல்லாம் மேல போய்டுச்சே.! CWC இந்த வார ப்ரோமோ.!

CWC -ன் டைட்டிலை வென்றது யார் தெரியுமா? 2வது, 3வது இடம் பற்றிய தகவலும் வெளியானது.! 3

இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் முதலிடத்தை மைம் கோபியும், இரண்டாவது இடத்தை சிருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்ராவும் கைப்பற்றி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ரியன் மற்றும் சிவாங்கி இருவரில் யாராவது ஒருவர் தான் பைனலிஸ்ட்டாக வருவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக மைம் கோபி டைட்டிலை வென்றிருக்கிறார். சீசன் 1ல் வனிதா, சீசன் 2வில் கனி, சீசன் 3 யில் ஸ்ருதிகா என தொடர்ந்து பெண்களே டைட்டில் வின்னர் ஆகி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆண் போட்டியாளரான மைம் கோபி வென்றிருக்கிறார். குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் சொல்வது போல “இவன்தான் நாயகன்” என்பது போல சீசன் 4ன் நாயகனாகி இருக்கிறார் மைம் கோபி.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment