பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு ஜீவாவின் மாமனார் ஜீவாவை அழைக்க நான் வீட்டிற்கு வர முடியாது என்று சொல்லி அவரது கைகளை உதறி விடுகிறார் ஜீவா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மீண்டும் அண்ணன் தம்பிகள் நால்வரும் இணைந்து இருக்கின்றனர். மிக சந்தோசமாக வெளியான இந்த வீடியோவை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூர்த்தி வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்த இடத்தில் ஜீவாவின் மாமனார் மற்றும் இரண்டாவது மருமகன் பிரசாந்த் ஆகியோர் ஜீவாவிடம் வம்பு செய்கின்றனர். இந்த வம்பு கைகலப்பு வரை போகிறது. மாமனாரும் சகலையும் இணைந்து கொண்டு தன்னை மிகவும் அவமானப்படுத்துவதை உணர்ந்து கொண்டார் ஜீவா. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனார்த்தனன் ஜீவாவை தன்னுடன் வருமாறு அழைக்கிறார். அப்போது தன்னால் வர முடியாது என்று ஜீவா மறுத்து விடுகிறார். உடனே மீனாவை அழைத்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறுகிறார் ஜனார்த்தனன்.

அப்போது மீனாவும் என் கணவனுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நானும் இருக்க மாட்டேன் என்று சொல்லி வர மறுக்கிறார். இதனால் அசிங்கப்படும் ஜனார்த்தனன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அண்ணன் தம்பிகள் நால்வரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். அந்த ப்ரோமோ வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television