15 வயது சிறுமியை விற்ற தாயின் கொடூரம்!

டில்லி பாவனா பகுதியில், தாயினால் பாலியல் தொழிலாளியிடம் விற்கப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி காவல்துறை மீட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், நேற்று (செப்.15) பாதர்பூரில் உள்ள அக்காவின் வீட்டிற்கு இருவரும் செல்ல வேண்டும் கூறியுள்ளார். ஆனால் நிசாமுதினில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஷாகித் என்பரிடம் தன்னை விட்டுவிட்டு சென்று விட்டார் என கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் அவர் தெரிவிக்கையில், தன்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக ஷாகித் கூறியதாகவும், ஆனால் அதற்கு பதிலாக பாவனா என்ற கிராமத்தில் உள்ள ஈஸ்வர் காலனிக்கு அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

ஷாகித் வீட்டினில் ஏற்கனவே இருந்த பெண்ணொருவர், திருமணத்திற்காக வாங்கப்பட்ட ஆடைகளை கொடுத்து, உடுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஏன் இது? என்று கேள்வி கேட்ட சிறுமிடம், அவரது தாய் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த பெண்மணி. இதைக்கேட்டதும் அச்சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.

விளம்பரம்

சூதாரித்துக்கொண்ட அச்சிறுமி, அக்கம் பக்கத்து வீட்டாரின் உதவியோடு டெல்லி மாநில மகளிர் ஆணையரை தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்புடையவை  ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 60 மணி நேரத்தை கடந்தும் தொடர்கிறது!!

இதனை தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், அச்சிறுமியை மீட்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இச்சிறுமி தனது தாய் மற்றும் தங்கை, தம்பி நால்வரோடு வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் அவரது தாயார் தனது ஒரு வயது மகனை ஒரு கடத்தல்காரருக்கு விற்றுவிட்டதாக, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment