தகன மேடையில் கீழே சரிந்த உடல்.! கதறிய பிள்ளைகள்.! கம்பீரமாய் வாழ்ந்த மனிதரின் கலங்க வைக்கும் இறுதி காட்சிகள்.!

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி இருக்கிறது. தேனி மாவட்டம் பசுமலைத்தேரி கிராமத்தில் அவரது தகன ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மாரிமுத்து. பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்பு இயக்குனராக அவதாரமெடுத்தார். பின்னர் இயக்கம் பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் நடிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பினார். யுத்தம் செய்ய என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், பின்னாளில் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஜெயிலர் படத்தில் வில்லனுக்கு ஆதரவான கேங்கில் நடித்து அசத்தி இருந்தார் மாரிமுத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகன மேடையில் கீழே சரிந்த உடல்.! கதறிய பிள்ளைகள்.! கம்பீரமாய் வாழ்ந்த மனிதரின் கலங்க வைக்கும் இறுதி காட்சிகள்.! 1

விளம்பரம்

ஆனால் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது என்னமோ எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலின் 500 வது எபிசோடு சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிலைமையில் இன்னும் பல எபிசோடுகள் மாரிமுத்து ஆதி குணசேகரனாக ஒரு கலக்கு கலக்குவார் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் நேற்று காலை மரணம் அடைந்திருந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அசௌகரியமாக உணர்ந்த அவர் தானே காரை ஓட்டிச் சென்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனையில் பார்க்கிங் வரை மட்டுமே செல்ல முடிந்துள்ளது. அவரது நாடித்துடிப்பு குறைந்து வாயில் நுரை தள்ளியதாக அவரை பரிசோதித்த மருத்துவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை சொந்த கிராமமான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

தொடர்புடையவை  கணவன் மனைவியாக வாழத் தொடங்கிய முத்து மற்றும் மீனா.! ரோஹிணிக்கு வயிறு எரிய போகுது.!

தகன மேடையில் கீழே சரிந்த உடல்.! கதறிய பிள்ளைகள்.! கம்பீரமாய் வாழ்ந்த மனிதரின் கலங்க வைக்கும் இறுதி காட்சிகள்.! 3
அங்கே நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளது. உடல், முகம் அனைத்தும் வீங்கிய நிலையில் மாரிமுத்து காணப்படுகிறார். அவரது உடலை தகனம் எடுத்து எடுத்துச் செல்லும் பொழுது உடல் கீழே சரிந்தது. இதைப் பார்த்து அவரது மகன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அழத்தொடங்கினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீங்காத நினைவுகளுடன் பிரியா விடை பெற்று சென்றார் மாரிமுத்து. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment