ஜெனிலியாவின் வாழ்வில் கடினமான தருணங்கள்!!

ஜெனிலியாவின் வாழ்வில் கடினமான தருணங்கள்!! 1

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், சென்னை காதல், வேலாயுதம் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிவிட்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குபோட்டார் ஜெனிலியா. ஆனாலும் திரையுலகின் தொடர்பை விடாமல் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஹவுஸ்புல் 4 என்ற படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் தனது கணவருடன் பங்கேற்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பிள்ளையின் பிறந்த நாள் அன்று கடிதம் எழுதி தனது வாழ்த்தை தெரிவித்த ஜெனிலியா தற்போது தனது தாயின் பிறந்த நாளில் கடிதம் எழுதி வாழ்த்து கூறியுள்ளார் . அதில்,’அன்புள்ள அம்மா, என் வாழ்வில் நான் சந்தோஷமான தருணம் மற்றும் கடினமான தருணங்களையும் பார்த்துள்ளேன்.

விளம்பரம்

எந்த தருணமாக இருந்தாலும் என்னுடன் இருந்த ஒரே ஒருவர் நீங்கள்தான். என்றென்றைக்கும் எனக்கு நிலையானவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் ஒருவரால்தான் என் வாழ்வில் எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நான் அப்படி எதையும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. உங்களை இதயம் நிறைய நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment