எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது முதல்முறையாக உணவுத் தொழிலை தொடங்கி விட்டு வீட்டிற்கு வரும் நந்தினியை ஆதிரை மற்றும் விசாலாட்சி இருவரும் பாராட்டுகின்றனர். ஆனால் இதை பார்த்த கரிகாலன் இங்கு என்ன நடக்கிறது? என்று கேட்கிறார். மேலும் கோவிலுக்கு சென்றீர்களே பிரசாதம் தரவில்லையா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது விசாலாட்சி ஆண்கள் அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் கண் அவிந்து போய்விடும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு நீ ஹனிமூன் செல்ல வேண்டும் என்கிறாயே அங்கு செல்ல முடியாமல் நீ கண் தெரியாத கபோதியாக மாறி விடுவாய் என்று சொல்லி கரிகாலனை அடக்கி வைக்கிறார். மறுபுறம் தர்ஷனுடன் வெளியில் சென்ற ஈஸ்வரி ஜீவானந்தத்தை சென்று சந்திக்கிறார். இருவரும் ஹோட்டலில் சந்தித்துக் கொள்கின்றனர். அங்கு ஜீவானந்தம் தன் மகளுடன் வருகை தந்திருக்கிறார். இப்போது கஷ்டத்தில் இருக்கிறது என் மகள் வெண்பா தான் அதுவும் என்னால் ஏற்பட்டது என்று ஜீவானந்தம் கூறுகிறார்.

அப்போது வெண்பா நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் என்ன நம் அம்மா மட்டும் நம்ம கூட இல்லை என்று சொல்கிறார். இதைக் கேட்ட தர்ஷனும் ஈஸ்வரியும் சோகத்தில் உறைந்து போகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV