வானத்தைப்போல சீரியலில் ராஜபாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக் இன்று தனது காதலியுடன் நிச்சயதார்த்தை முடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் வி.ஜேவாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது பல தொடர்களில் நடித்துவரும் ஒரு நடிகர் தான் நடிகர் அஸ்வின் கார்த்திக். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான் முதல் முதலில் நடிக்க ஆரம்பித்தார்.

முதல் சீரியலிலேயே நல்ல வரவேற்பு பெற்ற இவருக்கு, தொடர்ந்து அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரண்மனைக்கிளி, றெக்க கட்டி பறந்த மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, எங்கேயும் சமையல், குலதெய்வம், பிரியமானவள் போன்ற பல நாடகங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட்டானார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் ராஜபாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த ரோல் நெகட்டிவ் ரோலாக காட்டப்பட்டது. தற்போது இது பாசிட்டிவ்வாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் அஸ்வினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே 6.6 மில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்து சாதனை படைத்திருந்தது இந்த தொடர்.

இதில் ராஜபாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின் கார்த்திக் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது காதலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து தனது காதலியை அறிமுகப்படுத்தி இருந்தார்.

மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணி புரியும் காயத்ரியை காதலிப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram