விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா கேண்டீன் ஆர்டரை பாக்யாவிற்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று கேள்வி கேட்டு ஐடி கம்பெனியில் ஊழியர்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறார். இதில் பல வாக்குகள் பாக்கியாவிற்கு எதிராக விழுகிறது. இதனால் பாக்கியா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறா.ர் இந்த தேர்தலில் விழும் ஓட்டுக்களை பொறுத்துதான் பாத்தியாவிற்கு கேண்டீன் ஆர்டர் கிடைக்குமா இல்லையா என்பதை கூற முடியும் என்று ராதிகா கூறிவிட்டு செல்கிறார். இதனால் பாக்கியா உடைந்து போய் நிற்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோயினாக இருக்கும் பாக்யா ஐடி கம்பெனி கேண்டீன் ஆர்டர் ஒன்றை பிடித்து அதை நடத்தி வருகிறார். ஆனால் இதில் பாக்யாவின் கணவரின் இரண்டாவது மனைவியாக இருக்கும் ராதிகா ஹெச் ஆர் மேனேஜராக இருப்பதால் தொடர்ந்து பாக்யாவிற்கு சிக்கல்களை கொடுத்து வருகிறார். இப்போது கதைப்படி கேன்டீன் ஆர்டர் பாக்யாவின் கையை விட்டு போக இருப்பதாக தெரிகிறது. இதற்காக ஐடி கம்பெனி ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறார் ராதிகா. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் தான் கம்பெனி ஆடர் உங்களுக்கு கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காது என்று கூறுகிறார்.

மேலும் இது தன்னுடைய கம்பெனி தான் சொல்வதுதான் பிறர் கேட்பார்கள் என்று கூறுகிறார். அப்போது செல்வி, “நீ கவலைப்படாதே அக்கா, நம் சாப்பாடு சாப்பிட்டவர்கள், நமக்கு எதிராக ஓட்டு போட மாட்டார்கள்” என்று கூறுகிறார். ஆனால் பலரும் பாக்யாவிற்கு எதிராக வாக்களிப்பதை பாக்யா பார்த்து உடைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television