குடியுரிமை மசோதா, ஆபத்துகள் கூடியிருக்கின்றன: பிரசாந்த் கிஷோர்

அரசாங்கத்தின் கைகளில் ஆபத்து கூடிவிட்டது என தேர்தல் வியூக வல்லுநரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நேற்று பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுவிட்டது. இரு அவைகளிலும் ஆதரவு கிடைத்துவிட்ட நிலையில், இம்மசோதா விரைவில் அமல்படுத்தப்படும்.

விளம்பரம்
குடியுரிமை மசோதா, ஆபத்துகள் கூடியிருக்கின்றன: பிரசாந்த் கிஷோர் 1
பிரசாந்த் கிஷோர்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, தேர்தல் வியூக வல்லுநரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் “இந்திய குடியுரிமையை வழங்குவது மட்டும் தான் இந்த புதிய சட்டம் என நாம் பேசி வருகிறோம். ஆனால் இது தேசிய மக்கள் தொகை பதிவு அறிக்கையோடு இணைக்கப்பட்டுவிட்டது. இதனால் அரசாங்கத்தின் கைகளில் இரண்டு விதமான ஆபத்து இருக்கிறது. ஒன்று மத அடிப்படையில் பாகுபாடு கட்டப்படும். மற்றொன்று மத அடிப்படையில் வழக்காடவும், தண்டிக்கவும் முடியும்” என தெரிவித்தார்.

இவ்வாறு கிஷோர் கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது முழு ஆதரவையும் நாடாளுமன்றத்தில் வழங்கிவிட்டது. முன்னதாக மக்களவையில் ஆதரவு தெரிவித்தபோது, “காந்திய கொள்கையில் நடக்கும் நமக்கு, இந்த மசோதா முற்றிலும் எதிரானது. ஜேடியூவின் கட்சி சட்ட விதிகளில் முதல் பக்கத்திலேயே 3 முறை மதச்சார்பின்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பொது, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு தந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனவும் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment