படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலர் இன்று முன்னணி நடிகர்களாக உயர்ந்து இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக பலரை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த நடிகை தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிப் போயிருக்கிறார்.

அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2006ம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா.

இந்தப் இந்தப் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஸ்ரேயா சர்மா ஹீரோயினாக மாறி இருக்கிறார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்திற்கு பின்னர் பெரிய அளவில் படங்களின் நடிப்பதில் ஈடுபாடு காட்டாத அவர் சட்டம் படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தெலுங்கு படமான ‘காயகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் வழக்கறிஞர் பணிக்கே திரும்பி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குட்டை பாவாடைகளை அணிந்து கொண்டு மார்டன் உடையில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்த குழந்தையா இது? இப்படி மாறிவிட்டாரே? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.