சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தற்போது தகவல் வெளியாக இருக்கிறது. 90களின் இறுதியில் தொடங்கி தற்போது வரை பல மெகா ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் தொலைக்காட்சி. பல தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பு வந்தபோதிலும் சன் தொலைக்காட்சி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது. தற்போது கூட மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து அனைத்து சன் டிவி தொடர்களும் முன்னணியில் இருந்து வருகின்றன.

சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தைப்போல, எதிர்நீச்சல் ஆகிய சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக இருந்து வருகின்றன. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ என்கிற சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் கதாநாயகியாக நடித்த மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. இவர் ‘செம்பருத்தி’ தொடர் நிறைவடைந்த கையோடு மிகப்பெரிய தொலைக்காட்சியான சன் டிவியில் ‘மிஸ்டர் மனைவி’ தொடர் தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொடரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர சன் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் டிஆர்பி யில் வரவேற்பு பெறாத ‘அன்பே வா’ மற்றும் ‘செவ்வந்தி’ ஆகிய சீரியல்களையும் முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் வெளியானது முதலே ரசிகர்கள் பலரும் தொடரை முடிவுக்கு கொண்டு வர வேண்டாம் என்று சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram