‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மகாவுடன் சேர்ந்து பொம்மை தொழிலில் ஈடுபட்டதற்காக தற்போது சூர்யாவை பலரும் நேரில் வந்து பாராட்டி விட்டு செல்கின்றனர். இருந்த போதிலும் ராஜலட்சுமி மகாவை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலில் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘ஆஹா கல்யாணம்’ தொடர். ஒளிபரப்பாகத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடம் பிடித்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் தற்போது கதைப்படி மகாவின் தந்தை கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப்படுகிறார். அவரின் பொம்மை தொழிலில் உதவுவதற்காக மகா செல்கிறார். மேலும் தனது கணவர் சூர்யாவையும் ஒரு நாள் பொம்மை தொழிலில் ஈடுபட வைக்கிறார். இந்த விஷயம் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமிக்கு தெரியவந்து மிகுந்த சண்டை நடக்கிறது. மேலும் சூர்யாவுக்கும் மகாவிற்கும் நடுவில் விரிசலும் வருகிறது. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது சூர்யாவின் வீட்டிற்கு பலர் வருகை தருகின்றனர். அவர்கள் ஒரு பெரிய கம்பெனியின் எம்டி என்றும் பாராமல் பொம்மை தொழிலுக்கு உதவினீர்கள் என்று சொல்லி சூர்யாவை பாராட்டுகின்றனர்.

மேலும் சூர்யாவிற்கும் மகாவிற்கும் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு செல்கின்றனர். இதனால் சூர்யாவுக்கு சற்று மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை மேற்கோள் காட்டி சூர்யாவின் தந்தை ராஜலெட்சிமியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வேண்டுமானால் மகாவை மருமகளாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நான் எக்காரணம் கொண்டும் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television