காடுகளில் போட்டோகிராபராக சுற்றி திரியும் நடிகை ஆண்ட்ரியா!

காடுகளில் போட்டோகிராபராக சுற்றி திரியும் நடிகை ஆண்ட்ரியா! 1

“கா” எனும் படத்தில் நடித்துவரும் ஆண்ட்ரியா காடுகளில் சுற்றி திரிந்து வனவிலங்குகளை படம் பிடிக்கும் போட்டோ கிராபராக நடிக்கிறார்.

முழுவதுமாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், சலீம்கோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் பொறுப்புகளை நாஞ்சில் ஏற்றுள்ளார்.

விளம்பரம்

கதை முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தற் போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தை பற்றி அவர் கூறுகையில்:-

‘‘மூணாறில், 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இது வரை யாரும் செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். பெரும் பகுதி படப்பிடிப்பு இரவு நேரங் களில் நடைபெற்றது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது, மிகவும் பிரமிப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாச மான ஒரு கோணத்தில் ரசிக்கலாம்’’ என்கிறார், டைரக்டர் நாஞ்சில்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment