நடிகர் சித்தார்த் திடீர் ஆவேசம்!!

நடிகர் சித்தார்த் திடீர் ஆவேசம்!! 1

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் அரசியல் சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கருத்துகள் பதிவு செய்து வருகிறார். தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்களை போலீசார் அதே இடத்தில் சுட்டு கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

போலீசார் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமே தவிர அவர்களே சட்டம் கிடையாது என்று கூறியுள்ளார். பலாத்காரம் செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் என்கவுண்ட்டர் சரியான வழி இல்லை என்று கூறியிருந்தார். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்ததையும் கண்டித்திருந்தார்.

விளம்பரம்

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, சித்தார்த் என்பவர் யார் என்றே தெரியாது. அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார்? விளம்பரத்துக்காக பேசும் அவரைப் போன்றவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என்றார். இந்த வீடியோவை ஒருவர் வெளியிட்டு சித்தார்த் உங்களை பற்றித்தான் அமைச்சர் பேசுகிறார் என்று குறிப்பிட அதற்கு பதிலடி கொடுத்து சித்தார்த் கூறுகையில்:-

“நான் யார் என்று அமைச்சர் கேட்டு இருக்கிறார். அவரது அரசுதான் எனக்கு 2014-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியது. 2017-ம் ஆண்டிலும் விருது தருவதாக அறிவித்து இதுவரை அதை எனக்கு வழங்கப்படவில்லை. விளம்பரத்துக்காக பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொந்த முயற்சியால் உயர்ந்து இருக்கிறேன். தேசத்துக்காக வரி செலுத்தும் குடிமகன்களை அவமதிப்பது முறையாகாது” என்று அவர் கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment