நடிகை வரலட்சுமி மற்றும் அவரது தங்கை பூஜா ஆகிய இருவரும் இணைந்து சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், சுப்ரீம் ஸ்டார் ஆகவும் வலம் வருபவர் சரத்குமார். இவருடைய முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர் தான் வரலட்சுமி. இவருக்கு பூஜா என்கிற தங்கை உண்டு.

இவருக்கு ஆரம்பத்தில் ‘பாய்ஸ்’, ‘சரோஜா’, ‘காதல்’ போன்ற படங்களை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சரத்குமார் படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறியதால் இந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் வரலட்சுமி.

பின்னர் வரலட்சுமி படங்களில் நடிக்க சரத்குமார் அனுமதித்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘போடா போடி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இயல்பான நடிப்பும், யதார்த்தமான பேச்சும் இ.உந்தபோதிலும் அவருக்கு அடுத்தடுத்து பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து நடித்த ‘மானிக்யா’ என்ற படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

பின்னர் தமிழில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணசித்திர வேடங்கள், வில்லி வேடங்கள் என பல கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி.

இதன் பலனாக ‘சர்க்கார்’ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சமூக வலைதளங்களிலும் மிக ஆக்டிவாக இருப்பார்.

தனது தந்தை சரத்குமார் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் மிக நெருக்கமாக இருந்து வருகிறார் வரலட்சுமி. அவ்வப்போது ராதிகா மற்றும் சரத்குமார் உடன் வெளிநாடுகளுக்கு டூருக்கு செல்வது, அவுட்டிங் செல்வது என்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு தந்தை சரத்குமார், சித்தி ராதிகா, தங்கை பூஜா மற்றும் தனது அத்தைகள் என குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து இருக்கிறார் வரலட்சுமி. அந்த அழகிய புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
View this post on Instagram