சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் சக்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மற்ற மருமகள் தங்கள் தனியாக சென்று தர்ஷினியை தேடுகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஜனனி நாம் ஒன்றாக தானே வந்தோம் ஒன்றாகவே போய் தேடுவோம் என மற்றவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய்விடுகிறார். அவரை தேடுவதற்காக மருமகள்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் தர்ஷினியை மறைத்து வைத்திருப்பதாக ஆதி குணசேகரன் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது சக்திக்கு கார் விபத்து ஏற்படுகிறது. காரில் மோதி சக்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த செய்தி வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே குணசேகரன் மெய்யப்பன் குடும்பத்தை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் நாங்கள் தனியாக சென்று தர்ஷனியை தேடுகிறோம் என மற்ற மருமகள்கள் கூற, “ஒன்றாகத் தானே வந்தோம், நாம் ஒன்றாக இணைந்தே தேடுவோம்” என ஜனனி கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV