ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா தற்போது கண்ணீர் மல்க புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ராஜ்கிரணுக்கு செய்தி சொல்லும் அவர், தன்னை மன்னித்து விடுமாறும் முனீஷ் ராஜாவை நம்பி ஏமாந்து விட்டதாகவும், உங்களை நிறைய காயப்படுத்தி இருப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜ்கிரணின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் பிரியா. இவரை ராஜ்கிரண் தனது மகன் போல பாவித்து வளர்த்து வந்துள்ளார். அவருக்கு ஜீனத் பிரியா என்று பெயரையும் மாற்றி வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீனத் பிரியா முகநூலில் ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்த நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரண் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த திருமணத்திற்கு பின்னர் பதிவு ஒன்றைப் பகிர்ந்த ராஜ்கிரண், “பிரியா தனது மகளூ கிடையாது. அவர் தன்னுடைய வளர்ப்பு மகள். தனது மனைவியின் மூத்த கணவருக்கு பிறந்தவர். இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பெயரை தவறாகப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று பதிவிட்டு இருந்தார். திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்திருக்கும் நிலையில் தற்போது முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “நான் 2022ம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்தேன். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். பின்னர் நாங்கள் பிரிந்து விட்டோம். பிரிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. இது சட்டபூர்வமான திருமணமும் கிடையாது. இந்த திருமணத்திற்காக என்னுடைய வளர்ப்பு தந்தையான ராஜ்கிரனை நான் மிகவும் அசிங்கப்படுத்தி விட்டேன். நான் இவ்வளவு செய்த போதும் கூட எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது என் தந்தை எனக்கு வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று சொல்லி அவர் கதறி அழுகிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O