“கலா மாஸ்டர் அகால மரணமடைந்து விட்டார்” யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.!

இலங்கை யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கச்சேரியில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இருக்கை அமைப்பது, திரையில் சரியான ஒளிபரப்பு இல்லாதது ஆகியவை இருந்ததால் பணம் செலவழித்து நுழைவுச்சீட்டு பெற்ற பலரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு சலசலப்பும் சண்டையும் ஏற்பட்டது. பலரும் தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.

"கலா மாஸ்டர் அகால மரணமடைந்து விட்டார்" யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.! 1

விளம்பரம்

இதனால் பல நேரமாக கச்சேரி நிறுத்தப்பட்டு, பின்னர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து பிரச்சினை நீடித்ததால் குறுகிய நேரத்திற்குள் கச்சேரியை முடித்துக் கொண்டு இசைக் குழுவினர் கிளம்பி சென்றனர். விழா ஏற்பாட்டாளர்களின் செய்த தவறு இந்த குழப்பத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

"கலா மாஸ்டர் அகால மரணமடைந்து விட்டார்" யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.! 3

விளம்பரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கும் ஹரிஹரனின் இசை கச்சேரி என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், தமன்னா, ரம்பா, அவரின் கணவர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆலியா மானசா, சஞ்சீவ், கேபிஒய் பாலா, ரெடின் க்ங்ஸ்லி, நடிகர் சிவா உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தனர்.

தொடர்புடையவை  "தலைக்கனம் இல்லாத தல"!! ஹவுஸ் கீப்பிங் பெண்ணிடமும் அஜித் வெளிப்படுத்திய பண்பு"!!

"கலா மாஸ்டர் அகால மரணமடைந்து விட்டார்" யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.! 5

விளம்பரம்

இந்த நிலையில் கலா மாஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், “பிணக்குவியல் மேல் மானாட மயிலாடியவளே, இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கைக்கூலியே, மனமில்லாமல் உன்னை இங்கு யார் அழைத்தது.?

"கலா மாஸ்டர் அகால மரணமடைந்து விட்டார்" யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.! 7
இந்திய திரைத்துறையில் நடனத்திற்கு பேர் போன இவர், யாழுக்கு நட்சத்திர கொண்டாட்டத்திற்கு வருகை தந்து ஈழதமிழ் மக்களால் செருப்படி வாங்கி அகால மரணம் அடைந்து விட்டார். இவர் மேற்கொண்ட விபரீத முடிவால் மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று முன்னோர்களின் கூற்றுப்படி, மக்களின் தீர்ப்பாய் செருப்படி வாங்கி இரறந்திருக்கிறார். அன்னாரின் பிரிவால் வாடும் ஈழத் தமிழர்கள்” என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இசை நிகழ்ச்சிக்கு ரூ.30,000 வரை டிக்கெட்களை விற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கலா மாஸ்டர் தான் காரணம். எனவே அவருக்காக இப்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment