ஜனனிக்கு புது வேலையில் எழுந்த அடுத்த தலைவலி.! தொடர்ந்து அடிவாங்க போகும் ஜனனி.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கரிகாலனை அனுப்பி  ஞானத்தின் தொழிலை கெடுத்தது நான்தான் என்கிற உண்மையை ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைக்கிறார். சொந்த தம்பியின் தொழிலையே கெடுத்த ஆதி குணசேகரன் மீது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் வெறுப்பு கொள்கின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று இயக்குனரிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனனிக்கு புது வேலையில் எழுந்த அடுத்த தலைவலி.! தொடர்ந்து அடிவாங்க போகும் ஜனனி.! 1

விளம்பரம்

ரேணுகாவின் தாயார் ரூ.15 லட்சத்தை கொண்டு வந்து ஞானத்திடம் கொடுத்து ஏதாவது புது தொழில் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஞானம் கரிகாலன் பேச்சைக் கேட்டுக் கொண்டு கருவாடு எக்ஸ்போர்ட் செய்யும் பிசினஸை ஆரம்பிக்கிறார். ஆனால் அது அனைத்தும் திருடிக் கொண்டு வந்த சரக்குகள் எனச் சொல்லி அதை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகின்றனர். ஒரே நாளில் பிஸினஸ் கவிழ்ந்து ஞானம் தொழிலில் நஷ்டத்துடன் வீடு வந்து சேர்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து வீட்டில் தினமும் சண்டை எழுந்து வருகிறது. இந்த நிலையில கரிகாலன் தற்போது ஆதி  குணசேகரன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

தொடர்புடையவை  மாவீரன் படத்தை இப்பதான் பார்த்தேன்.! படம் பற்றி அருண்விஜய் போட்ட ட்வீட்.! என்ன சொல்லிருக்காருனு பாருங்க

ஜனனிக்கு புது வேலையில் எழுந்த அடுத்த தலைவலி.! தொடர்ந்து அடிவாங்க போகும் ஜனனி.! 3

விளம்பரம்

அவரைப் பார்த்த சக்தி, ஞானம், கதிர் என அனைவரும் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றனர். அப்போது ஆதி குணசேகரன், “கரிகாலன் நான் செட் செய்த ஆள். ஞானத்தின் பிஸினஸை கெடுப்பதற்காக நான்தான் அவரை அனுப்பினேன்” என உண்மைகளை உடைக்கிறார். இவ்வளவு கீழ்த்தரமாக ஆதி குணசேகரன் இறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment