ஜாமியா கலவரம், உள்ளூர் குண்டர்களின் சதி செயல்!

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் முகாந்திரம் உள்ளதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. டெல்லியில் இயங்கிவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டம் வன்முறையாக மாறவே காவல்துறையினரும், துணை இராணுவ படையினரும் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்கி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக்கி உள்ள நிலையில், இந்த கலவரம் தொடர்பாக 10 பேர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரம்
ஜாமியா கலவரம், உள்ளூர் குண்டர்களின் சதி செயல்! 1

இது குறித்து டெல்லி காவல்துறை அறிக்கையில், திங்கள் கிழமை இரவு பொழுதில் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, மூத்த அதிகாரி ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எந்த ஒரு மாணவரும் கலவரம் தொடர்பாக கைது செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் அமைதியாக நடத்திய பேரணியில் கலவரம் ஏற்படுத்தும் வண்ணம் சந்தேகத்திற்குரிய சில அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் எந்த ஒரு மாணவரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை..காலில் 3 விரல்கள் அகற்றம்..மனவேதனையில் தொண்டர்கள்

ஞாயிறு கிழமை அன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறை மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியது. இதில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மாணவர்கள் தரப்பில் கூறுகையில், காவல்துறையினர் நூலகத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கலவரத்தில் டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான 4 பேருந்துகளும், 100 தனியார் வாகனங்களும், 10 காவல்துறையினரின் வண்டிகளும் கொளுத்தப்பட்டுள்ளன. இவை எல்லாம் கலவரம் ஏற்படுவதற்காக உள்ளூர் குண்டர்களின் சதி செயலென காவல் ஒப்புக்கொண்டதாக என்.டி.டீ.வி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment