
பொன்னேரியை அடுத்துள்ள அரவாக்கத்தை சேர்ந்த தம்பதியர் திரேச்குமார் – கோமதி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருக்கிறான். 27 வயதாகும் கோமதி திரேச்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக குடும்பத்துடனே வேலைபார்க்கும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற நிலையில் திரேச்குமார் கறி கடைக்கு சென்றுவிட்டு கோழிக்கறி வாங்கி வந்திருக்கிறார், அதனை மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லியிகுக்கிறார். கோழிக்கறியை எடுத்து கொண்டு கோமதி சமையல் செய்ய கிச்சனுக்கு செல்ல முயன்றார்.
அந்நேரத்தில், குழந்தையை கவனித்து கொள்ளுமாறு கணவனிடம் சொல்லியிகுக்கிறார், அவர் சொல்வதை மறுத்துள்ளார் அவரது கணவர். குழந்தையை கவனிப்பதில் தான் இந்த பிரச்சனையே ஆரம்பமாகி இருக்கிறது. குழந்தையையும் சமையலும் எப்படி ஒரே நேரத்தில் கவனித்து கொள்வது என்று கோமதி கேட்டுள்ளார், இதை கேட்டு திரேச்குமார் ஆத்திரம் அடைந்தார். அதனால், சரமாரியாக கோமதியை தாக்கியதுடன், அருகே இருந்த ஒயரை எடுத்து கோமதியின் கழுத்தை சுற்றி இறுக்கி.. நெரித்து கொன்று விட்டார்.
இதை பார்த்து பதறி போன திரேச்குமார், கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என மாமியார் வீட்டுக்கு தகவல் சொல்லிவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோமதியின் பெற்றோர்கள் மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். திரேச்குமாரும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். மகளின் சடலத்தை அரவாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.யாருக்குமே திரேச்குமார் மீது சந்தேகம் ஏற்படாமல் இருந்தாலும், கோமதியின் உறவினர்களில் சிலருக்கு சந்தேகம் எழ தொடங்கியது. இதனையடுத்து, பேட்டை போலீசில் புகார், கோமதியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பவே, அந்த ரிப்போர்ட்டில் கோமதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.