சீன நிறுவனங்களுடன் கைகோர்க்கும் டாடா மோட்டார்ஸ்

கடனில் சிக்கி தத்தளித்து வரும் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை தீட்டி உள்ளது.

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு சீன ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சீன நிறுவனங்கள் நேரடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அல்லது புதிய நிறுவனத்தை கூட்டணி முறையில் அமைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்
சீன நிறுவனங்களுடன் கைகோர்க்கும் டாடா மோட்டார்ஸ் 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் கடன் அளவு மட்டும் 23 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல பிரிட்டன் வர்த்தக பிரிவில் 95000 கோடி ரூபாய் கடன் இருக்கின்றது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போது சீனா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களுடனான கூட்டணி என்பது டாடா மோட்டார்ஸின் கடன் சுமையை ஓரளவு குறைக்கும். மேலும் வர்த்தகத்தை பெருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியச் சந்தையில் டாடா மோட்டார்சின் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது சீன நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

விளம்பரம்

Leave a Comment