இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் டிமாண்டி காலனி. இப்படம் நடிகர் அருள்நிதி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்திற்கு பிறகு தான் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அருள்நிதி. தற்போது பல படங்களில் அருள்நிதி நடித்தாலும் இவரின் டிமாண்டி காலனி திரைப்படம் அனைவர்க்கும் விருப்பமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

தற்போது 9ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார். இயக்குனர் அஜயின் கோப்ரா படம் சரியாக ஓடாத காரணத்தால் , இப்படத்தில் அதிக மெனக்கெடல் எடுத்து வெற்றிக்காக போராடி அதையும் சாதித்து இருக்கிறார்.
![]()
இப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ . 5கோடி வசூலை பெற்று இருக்கிறது. மேலும் வருகிற விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமான வசூலை இப்படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேய் படங்களை குழந்தைகள் அதிகம் விரும்புவதால் படத்தின் வசூல் இன்னும் விடுமுறைநாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.