தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து இவருக்கு சரியான வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தனக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருந்த இவருக்கு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக வாய்ப்பு கிடைத்தது.

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் விநாயகன். இப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு நடிகர் விநாயகன் அடிக்கடி சிக்கலை சிக்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வந்த விநாயகன், அங்கு உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரை அங்கிருந்த போலீசார் கைது செய்து உள்ளனர். ஆனால் விநாயகன் தன்னை, பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறி உள்ளார். இந்த விவகாரம் தற்போது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.