கேரளாவில் நடிகர்கள் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் ராயல்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கொச்சி ப்ளூ டைகர்ஸ், கொல்லம் சைலர்ஸ், காலிகட் குளோப் ஸ்டார்ஸ், ஆலப்புழை ரிப்பிள்ஸ் என ஆறு அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டிக்கான பிராண்ட் அம்பாசிடர் ஆக உள்ளார் மோகன் லால். இதில் ஒரு அணியான திருவனந்தபுரம் ராயல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவராக நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளார்.

இந்த போட்டி துவக்கத்தின் போது தனது அணியை அறிமுகப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது கேரளா கிரிக்கெட் யூனியன் லீக் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியை காண கீர்த்தி தனது குடும்பத்துடன் வருகை தந்து உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

தனது அணி முதல் வெற்றியை பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.
