சென்னையில் அரங்கேறி உள்ள தற்கொலை சம்பவம்! தனியார் கல்லூரியில் பரபரப்பு!!

சென்னையில் அரங்கேறி உள்ள தற்கொலை சம்பவம்! தனியார் கல்லூரியில் பரபரப்பு!! 1
A fabric low poly suicide rope with slipknot placed on the white concrete wall with white space on left. 3D illustration and rendered by program Blender.

திருவள்ளூர் மாவட்டத்தில் காரப்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்தவர் ஹரிசாந்தி (வயது 32).இவர் சில வருடங்களுக்கு முன்பாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்தார்.கல்லூரியில் பணியாற்றி கொண்டே அரசு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஆசிரியையாகி பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

மேலும், அவ்வபோது தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை பார்ப்பதற்கென தனியார் கல்லூரிக்கு வந்து போவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தவர் தான் பணியாற்றிய தெலுங்கு பிரிவு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.

விளம்பரம்

இதையடுத்து, இன்று காலை தெலுங்கு பிரிவு துறைத் தலைவர் நட்ராஜ் வகுப்பறையை திறந்துள்ளார். அப்போது ஹரி சாந்தி தூக்கில் தொங்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கொண்டு வந்த கைப்பை, செல்போன் ஆகியவை வகுப்பறையில் இருந்துள்ளது. ஹரிசாந்தி கல்லூரிக்குள் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடையவை  மும்பை சாண்டாக்ரூஸில் பாலியல் - கொலை வழக்கில் 2 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்

இறந்துபோன ஹரி சாந்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை இறந்துவிட்டார். தற்போது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment