கர்நாடகம் முழுவதும் 44 தடை உத்தரவு

கர்நாடகாவில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது.

தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதிலிருந்து இப்போராட்டம் நாடு முழுக்க உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பரவியது.

விளம்பரம்
கர்நாடகம் முழுவதும் 44 தடை உத்தரவு 1
பெங்களூரு மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் நாளை இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு. இதன் எதிரொலியாக கர்நாடகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் பெங்களூர் நகருக்கு மட்டும் நாளை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும். இத்தடை உத்தரவானது டிசம்பர் 21ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment