பிரபல இயக்குனரும், சூப்பர் ஸ்டார் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நட்சத்திர ஜோடியாக சினிமாவை வலம் வந்த இருவரும் திடீரென விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் வருங்காலத்தில் சேருவார்களா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இருவரும் தங்களது வேளைகளில் பிசியாக இருந்து வருகின்றனர் . ஐஸ்வர்யா தனது அடுத்தப்படத்திற்கான கதை எழுதும் பணிகளை தொடங்கிவிட்டார். நடிகர் தனுஷ் பாலிவுட்டில் ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்து வருகிறார்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி ஐஸ்வர்யா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை நடிகர் தனுஷ் லைக் செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் வரும்காலத்தில் இருவரும் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.