திருமணம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த தொடர்களில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த தொடர் முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ஆவலாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து இருவரும் வேறு வேறு சீரியல்களில் நடித்து வந்தனர்.இந்நிலையில் சில வருடங்களுக்கு பிறகு சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் ஒரே தொடரில் கமிட் ஆகி உள்ளனர்.இந்த புதிய தொடர்நது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடருக்கு வள்ளியின் வேலன் என பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது சித்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரேயா கொண்டாடி உள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இருவரின் ஜோடியையும் புகழ்ந்து கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
