தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை இவரது வெற்றிக்கொடியை நட்டியுள்ளார்.ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தனக்கு உரித்தான பாணியில் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவை கலக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது இவரது மகன் சூர்யாவும் சினிமாவில் நாயகனாக அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் நடித்து அறிமுகம் ஆக உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் இப்படத்தினை காண ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி விஜய் சேதுபதி மகன் சூர்யா வாய் கொடுத்து மாட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். கடந்த முறை அப்பா வேறே நான் வேறே என கூறிய நிலையில் நெட்டிசன்கள் வைத்து கலாய்த்து எடுத்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பேசிய அவர், டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் நடிகரின் மகன் நடிகர் ஆக கூடாதா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் அறிமுகம் ஆகுவது தந்தையை வைத்து என்றாலும் உழைப்பின் மூலமாகத்தான் மேல் வர முடியும் என கூறி இருந்தார். இந்நிலையில் நெப்போட்டிசத்துக்கு ஆதரவாக சூர்யா பேசுவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.