தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது அனுஷ்கா தான். தற்போது அவருக்கு பெரிதாக படங்கள் இல்லையென்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். அருந்ததி படத்தில் நடித்ததின் மூலம் பல ரசிகர்களை தனக்காக உருவாக்கி முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடிக்க தொடங்கினார். தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ளார் அனுஷ்கா.இவர் நடித்த பாகுபலி படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தினை சினிமாவில் கொடுத்தது. இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் அசத்தி இருந்தார். ஆனால் இப்படத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கு எந்த படமும் வெளியாகவில்லை.

இது மிகப்பெரிய சோகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு காதி என்ற படத்தில் நடித்து உள்ளார். க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து உள்ளார். இப்படம் பாண் இந்தியா படமாக உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : UV CREATIONS