தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியா பல முதலீடுகளை இழக்கும் என இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர் ஆன டிம் ட்ராபர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு மதத்தின் மேல் இன்னொரு மதத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது, அந்நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமா என தனக்கு கவலை இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிம் ட்ரபர் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தி வையர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “என்னை பொறுத்தவரை சுதந்திரம் என்பது முக்கியமானது. அதிகளவிலான சட்ட விதிகளும் மற்றும் அடக்குமுறைகளும் பெருவாரியாக ஊழலை உருவாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இனமக்கள் மற்றவர்களைவிட சமூகத்தில் சிறப்பான முறையில் அரசாங்கத்தால் கவனிக்கப்படும் போது, அங்கு அநியாயங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது ஒரு புற்று நோய் போல சமூகத்தில் ஊடுருவிச் செல்கிறது. இத்தகைய மோசமான நடத்தை உள்ள நாட்டில் முதலீடு செய்ய விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.