ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் ஆளும் பாஜக ஆட்சியில் இருக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதன் முதல்வராக பாஜகவின் ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். இந்நிலையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்று இரவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

சி வோட்டரஸ் கருத்துக் கணிப்புபடி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனவும் மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகளும் கிடைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்திய டுடே கருத்துக்கணிப்பின்படி ஜேஎம்எம்-ஆர்ஜேடி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு சுமார் 38 முதல் 50 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 42 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.