தொடர்ந்து நடந்த போராட்டம்! ரூ.88 கோடி இழப்பை சந்தித்த ரயில்வே!!

தொடர்ந்து நடந்த போராட்டம்! ரூ.88 கோடி இழப்பை சந்தித்த ரயில்வே!! 1

நாட்டையே திருப்பி போட செய்துள்ளது மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டம் திருத்தம். இந்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனால் நாட்டின் தலைநகரான டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும் தடை உத்தரவு அமலில் உள்ளது.இதே நிலை தென்னிந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.

விளம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களால் இந்திய ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளிட்ட தகவலின் படி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தினால் ரெயில்வே துறைக்கு ரூ.88 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  தெர்மாகோல் வீடுகள்....

இதில் கிழக்கு மண்டல ரெயில்வே துறைக்கு ரூ.72 கோடி, தென்கிழக்கு மண்டல ரெயில்வேக்கு ரூ.13 கோடி மற்றும் வடகிழக்கு மண்டல ரெயில்வேக்கு ரூ.3 கோடி அளவிற்கும் சொத்துகள் சேதம் அடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment